நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - உண்மையை உடைத்த சி.பி.ஐ.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதித்சூர்யா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சியடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,படிப்பில் சேர்ந்ததாக கண்டமனுார் போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். 

இதையடுத்து உதித் சூர்யா படிப்பை தொடர விருப்பமின்றி, விலகிக் கொள்வதாக கல்லுாரிக்கு கடிதம் அளித்தார். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தரகராக செயல்பட்ட சென்னை கீழ்பாக்கம் தருண்மோகன் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.சி.ஐ.டி., தரப்பில், நீட் தேர்வு நடந்த தேதியில் உதித்சூர்யா சென்னையிலும், அவரது பெயரில் மும்பையில் வேறொருவரும் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் எழுதியஉதித் சூர்யா 135 மதிப்பெண், அவருக்காக மும்பையில் எழுதியவர் 385 மதிப்பெண் பெற்றுஉள்ளனர். மும்பையில் எழுதியவரின் மதிப்பெண் அடிப்படையில் உதித் சூர்யா தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ரான் என்ற மாணவருக்காக ஜார்கண்ட், உ.பி.,ராஜஸ்தானில் சிலர் 2019 மே5 ல் தேர்வு எழுதியுள்ளனர். அப்போது முகமது இப்ரான் மொரிஷியசில் இருந்துள்ளார். 

இத்தேர்வு மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவு, தேர்வில் பங்கேற்றோரின் கைரேகை பதிவு, ஆதார் விபரங்களை தேசிய தேர்வு முகமையிடம் கோரினோம். தர மறுக்கிறது. அந்த விபரண்களைத் தந்தால் தான் முறைகேட்டில் யார், யாருக்கு எத்தகைய தொடர்புகள் உள்ளன என்பது தெரியவரும் என்றுத் தெரிவித்தது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 16 ஆம் தேத்திக்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cbi explain Change of person in neet exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->