மக்களே உஷார் : சிபிஐ அதிகாரி பேசி பெண்ணிடம் கூகுள் பே மூலம் நூதன முறையில் மோசடி!! - Seithipunal
Seithipunal


சிபிஐ அதிகாரி என செல்போனில் பேசி பெண்ணிடம் கூகுள் பே மூலம் நூதன முறையில் மோசடி செய்த நபரை காவல்துறை தேடி வருகிறது.

எண்ணூர் ஜோதி நகரை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் உமா தம்பதி. இவர்களது மகன் பிரவீன் குமார் சென்னை நந்தனத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பிரவீன்குமார் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் உமாவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் நான் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் நண்பருடன் சேர்ந்து தவறு செய்ததால் அவரை பிடித்து வைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூபாய் 40 ஆயிரத்தை எனது குறிப்பிட்ட எண்ணுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப வேண்டும். இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன உமா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர் முதலில் இருக்கும் பணத்தை அனுப்பிவிட்டு அதன் பிறகு மீதி பணத்தை அனுப்பி வையுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மகனை காப்பாற்ற முடியாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மகனைக் காப்பாற்ற உமா தன்னிடம் இருந்த பத்தாயிரத்தை கூகுள் பேன் மூலம் மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். அதன் பிறகு மகன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது தான் அது போல் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதும் மர்ம நபர் சிபிஐ அதிகாரி என பேசி நூதன முறையில் பணம் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

பின்னர் இது குறித்து சாத்தங்காடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI officer talks to woman about fraud through Google Pay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->