சிசிடிவி கட்டாயம் - மருந்தகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!
cctv camera fit in all medicals
சென்னையில் "வலி நிவாரணிகள்" என்ற பெயரில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் சில மருந்தகங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. மேலும், மருந்து கடைகளில் இருந்து இருந்து பெறப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் 1940 மற்றும் 1945 அட்டவணை "X "H","H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
cctv camera fit in all medicals