கடற்கரைக்கு செல்பவர்கள் உஷார்! கத்தியை காட்டி கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் கத்தியை காட்டி கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றையும் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம் பைக்கில் இரவு கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்துள்ளனர். அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று அதிகாலை 4:45 மணிக்கு கோவளம் கடற்கரை பகுதிக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கோவளம் கடற்கரையில் இருந்த மர்மகும்பல் இதனை நோட்டமிட்டு அவர்கள் மூன்று பேரை பின் தொடர்ந்து சென்று மாணவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம்  விலை உயர்ந்த செல்போன் பணம் ஆகியவற்றைப் பறித்துள்ளனர்.

பின்னர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி ஒரு மாணவிகளிடம் கூகுள் பே மூலம் ரூபாய் பத்தாயிரம் பணத்தை அனுப்பி கொண்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கேளம்பாக்கம் போலீசார் பலத்த காயம் அடைந்த மாணவர்களின் நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம் வாக்குமூலம் பெற்று கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cell phone and money extorted from college students at Kovalam beach at knife point


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->