சர்ச்சையை கிளப்பிய லியோ ட்ரைலர் - திரையரங்குகளுக்கு வந்த புதிய சிக்கல்.! - Seithipunal
Seithipunal


சர்ச்சையை கிளப்பிய லியோ ட்ரைலர் - திரையரங்குகளுக்கு வந்த புதிய சிக்கல்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த ட்ரெய்லர் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதற்காக திரையரங்கம் முன்பு ஏராளமானோர் குவிந்தனர். பட்டாசு ஆட்டம் பட்டம் என்று பிரமாண்டமாகக் கொண்டாடினர்.

அப்போது திரையரங்கில் உள்ள இருக்கைகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றன. இந்த நிலையில், அந்த ட்ரெய்லரில் விஜய் பேசியிருந்த ஆபாச வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். யூடியூப் என்பதால் டிரெய்லர் அப்படியே வெளியிடப்பட்டது. இதேபோல், சென்சார் செய்யபடாத டிரெய்லரை சென்னையில் உள்ள திரையரங்குகளும் வெளியிட்டன. 

இதையறிந்த மத்திய தணிக்கை வாரியம் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என்று விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

censor board notice to theatre for released uncensored trailer of leo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->