மிக்ஜாம் புயல் சேதம் - சென்னைக்கு வந்தது மத்திய குழு.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம்' புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இந்த வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக கடந்த 7-ந் தேதி  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்து ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்ட பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்தார். 

இந்த நிலையில், தமிழகத்தில் புயல், மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு ஒன்று சென்னைக்கு வந்துள்ளது. 

இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை, மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்டத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர். 

மத்திய குழுவினர் இன்று மற்றும் நாளை இரண்டு பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல உள்ளன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central committee arrived in chennai for see floods affected place


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->