தமிழகத்திற்கு வந்த மத்திய குழு.. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்பு.!!
central committee came to tamilnadu
இந்தியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்முறையாக தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
கடந்த 2ஆம் தேதி இந்தியாவில் முதல் முறையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் இதுவரை 34 பேரும் ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத் துறை வல்லுனர்களான புர்பசா, வினிதா, சந்தோஷ்குமார் தினேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு சென்னை வந்தடைந்தது. மூன்று நாள் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் மாநில சுகாதாரத் துறைக்கு பரிந்துரைகள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
central committee came to tamilnadu