தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி நிதி - மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் அணைத்து மாநிலத்திற்கும் வரி பகிர்ந்து வருகிறது. அதன் படி, டிசம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் தவணையை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது. 

இந்த வரிப் பகிர்வு நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், மாநில அரசுகள் தங்கள் முதலீடுகள் மற்றும் செலவினங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வரிப் பகிர்ந்தளிப்பு வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government 2976 crores tax distribution to tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->