ஈஷா அறக்கட்டளை கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி விதியிலிருந்து விலக்கு அளித்தது ஏன்? உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் - Seithipunal
Seithipunal


கோவை ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வருடம் நவம்பர் 19-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, டி. கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு தரப்பில் கல்வி நோக்கத்திற்காகவும், மாணவர் விடுதிக்காகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு, பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். பின்பு ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Government explained in the High Court why Isha Foundation buildings were exempted from environmental clearance rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->