கஞ்சா வழக்கில் சிக்கிய சவுக்கு சங்கர் - குற்றப்பத்திரிகை தாக்கல்.! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். 

அப்போது, அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு, மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். இந்தக் குற்றப்பத்திரிக்கை ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chargesheet submit against savukku sangar ganja case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->