மாமல்லபுர கொடூர விபத்தில் 6 பேர் பலி! முதல்வர் ஸ்டாலின் இரங்கல், நிவாரணம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், எண்.69, மணமை கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (4-5-2023) மதியம் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்ற பேருந்தும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த சென்னை, ஆலந்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த திருமதி.காமாட்சி (வயது 80), திரு.கோவிந்தன் (வயது 60) திருமதி. அமுலு (வயது 50), திருமதி.சுகன்யா (வயது 28), குழந்தைகள் ஹரிபிரியா (வயது 8) மற்றும் கனிஷ்கா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Auto Bus Accident case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->