சென்னை அருகே கொடூரம்: குற்றவாளியை பிடிக்க சென்று பலியான பெண் காவலர்கள்! பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், இரு பெண் காவலர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுராந்தகம் பகுதியில் ஒரு குற்றவாளியை பிடிக்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் புறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்தியா கொடூர விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

பணியில் இருந்த ஜெய்ஸ்ரீ இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றபோது, எதிர்பாராத விதமாக வேகமான வந்த கார் அவர்கள் பயணித்த வாகனத்தின் மீது மோதியது. 

இந்த விபத்தில், ஜெய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நித்தியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துயரமான நிகழ்வில் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டு, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். 

விபத்தில் இரு பெண் காவலர்களின் இறப்பு காவல்துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu lady Police SI death in accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->