#BREAKING || சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மூன்று பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயிலில் அடிபட்டு சற்று முன்பு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

செட்டிபுண்ணியம், அன்பு நகர் ரயில்வே கிராசிங்கில், ரயிலில் அடிபட்டு இறந்த மூன்று பேர் குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டனர்.

அன்பு நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மின்சார ரயில் மோதி மோகன், பிரகாஷ், அசோக் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மது அருந்திவிட்டு, வீடியோ பதிவு செய்த போது, மின்சார ரயில் மோதியதில் மோகன், பிரகாஷ், அசோக் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயில்வே கிராசிங்கில் மூன்று பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENGALPATTU Railway Crossing Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->