பிளிச்சிங் பவுடரில் விஞ்சான ஊழலா? செங்குன்றத்தில் நடந்தது என்ன?
Chengundram Michaung Cyclone Bleaching Powder Maida
கடந்த 4 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது.
மழை நீரை வடிய வைத்தபின், நான்கு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியிலும் தூய்மை பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. தூய்மை பணிகளுக்கு பின் இறுதியாக ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/dfghyjkefr-4cuqr.png)
ஆனால், அது பிளிச்சிங் பவுடர் இல்லை என்றும் மைதா மாவு என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினார். இதுகுறித்த புகைப்படம் மற்றும், காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படவில்லை என்று அதிகாரி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மைதா மாவு சாக்கு பையை பயன்படுத்தி, ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கலந்த பவுடரையே சாலையோரம் ஒப்பந்ததாரர் தூவியதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chengundram Michaung Cyclone Bleaching Powder Maida