சென்னையில் பயங்கரம்: சிகரெட்டால் சுட்டு சித்தரவதை! கழிவறையில் 16 வயது சிறுமியின் உடல்! கொடூர தம்பதி கைது! - Seithipunal
Seithipunal


சென்னை அமைந்தகரையில் வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் உடல், சிகரெட் சுட்ட காயங்களுடன் கழிவறையில் மீட்கப்பட்ட நிலையில், சிறுமியை கொலை செய்துவிட்டு உறவினரின் வீட்டுக்கு தப்பி ஓடிய தம்பதியினரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான முதல் கட்ட தகவலின்படி, சென்னை அமைந்தகரைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முகமது நவாஸ் மற்றும் அவரின் மனைவி வசித்து வந்துள்ளனர். 

அவர்களின் வீட்டில் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வந்துள்ளார். தீபாவளி அன்று, சிறுமி வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்பதால், கணவன், மனைவி சேர்ந்து சிறுமியை கடுமையாக சித்திரவதை செய்து கொலை செய்து உள்ளனர்.

மேலும், சிறுமி கழிவறைக்கு சென்று திரும்பவில்லை என நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை கொலை செய்துவிட்டு உறவினர் வீட்டுக்குத் தப்பி ஓடிய தம்பதியை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai 16 years old girl brutel murder case shocking info


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->