சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் மாற்றம்..!!
chennai airport customs department officers transfer
சென்னை விமானநிலையத்தில் சுங்க இலாகா முதன்மை ஆணையர் உள்பட உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்த விவரங்களை இங்குக் காண்போம்.
சுங்க இலாகா முதன்மை ஆணையராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, கூடுதல் துணை ஆணையர் பெரியண்ணன், சுங்க இலாகா துணை ஆணையர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை ஆணையர் அஜய் பிடாரி, உதவி ஆணையர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 ஆணையராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை விமானநிலையத்தின் புதிய சுங்க இலாகா முதன்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று டெல்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா. பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
chennai airport customs department officers transfer