சென்னை விமான நிலையத்தில் ''கடத்தல் தங்கம்'' பறிமுதல்! பயணிகளிடம் தீவிர விசாரணை.!
Chennai airport smuggled gold seized
சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் 2 பேர் தங்களது உள்ளாடை மற்றும் உடமைகளுக்குள் தங்க செயின்கள், வளையல்கள் போன்றவற்றை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து 2 பயணிகளிடம் இருந்து சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் அபுதாபியில் இருந்து வந்த மற்றொரு பயணியிடம் ரூ. 23 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் ரூ. 1.67 கோடி மதிப்பிலான 2.66 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chennai airport smuggled gold seized