சென்னை விமான நிலையத்தில் திடீர் உயிரிழப்புகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!
Chennai airport suddenly death
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:
சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு நேற்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் பயணிக்க, இலங்கையை சேர்ந்த சிவகஜன்லிட்டி (வயது 43) பெண், பயணி பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதே போன்று நேற்று இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 48) எனபவர் சென்னைக்கு வந்தார்.
இவர் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு, சுங்கச்சோதனை பிரிவுக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நாளில் இரு பயணிகள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Chennai airport suddenly death