சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம்; பேருந்து சேவை தொடக்கம்..!
Chennai Airport to Klampakkam Bus service starts
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரை ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய 07மாநகர பேருந்துகள் இன்று சேவையை தொடங்கியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அக்கரைக்கும் குறித்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
Chennai Airport to Klampakkam Bus service starts