சென்னை உதவி பேராசிரியர் தற்கொலை: பதறிய லாட்ஜி ஊழியர்கள்! நடந்தது என்ன?
Chennai assistant professor suicide
சென்னை, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 30). இவர் சென்னை சுவேதா பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் செல்வதாக தனது வீட்டில் தெரிவித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாததால் சந்தேகம் நிறைந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜேக்கப் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதியில் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chennai assistant professor suicide