சற்றுமுன் : சென்னை மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் தவிப்பு!  - Seithipunal
Seithipunal


நெருக்கடி மிகுந்த சென்னை மாநகரத்தில் மின்சார ரயில் போக்குவரத்தானது, மக்கள் போக்குவரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் சற்றுமுன் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு செல்லும், மின்சார ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக தற்பொழுது செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

மின்சார ரயில் இயங்க வைக்கும் மின் விநியோக கம்பிகள் பழுதடைந்து இருப்பதால் பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முதல் நடைமேடையில் நின்று விட்டது. இதையடுத்து அந்த மின் இணைப்பு வழங்கும் மின் விநியோக கம்பிகளை சரி செய்யும் முயற்சியில் ரயில்வே மின் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் அங்கங்கே நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai beach tamabaram electric train stopped due to electricity failure


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->