#JUSTIN : சென்னை புத்தக கண்காட்சிக்கு ஆன்லைனில் முன்பதிவு-தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சி கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் காரணமாக புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை நாற்பத்தி ஐந்தாவது புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க அஅனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க bapasi.com என்ற இணையதளம் மூலம் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு வழங்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai book Fair online ticketing


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->