சென்னை மக்கள் கவனத்திற்கு! பொங்கலால் மிஸ் பண்ணிட்டிங்களா? நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், மாதாந்திர பயண அட்டை பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு மாதமும், மாதத்தின் 16ஆம் தேதி வரை விநியோகிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் மாதாந்திர பயண அட்டையை பெறாமல் இருந்திருப்பர்.

மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஜனவரி 24ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.1,000 பேருந்து பயண அட்டை, மாணவர்களுக்கான 50 சதவீத சலுகை பயண அட்டை அனைத்தையும் ஜனவரி 24 வரை மாநகரப் போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Bus monthly pass


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->