சென்னையில் வலிமை பட பாணியில் ஒரே நேரத்தில் 7 பேரிடம் செயின் பறிப்பு - மக்களில் அதிர்ச்சி!
Chennai Chain Snatching case in 7 place Tamilnadu
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் கூட ஒரு கும்பல் திட்டம் போட்டு ஒரே நேரத்தில் மாஸ் Chain Snatching சம்பவத்தில் ஈடுபடுவார்கள். அதேபோல் சென்னையில் இன்று காலை 1 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் பெண்களின் செயின்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 15 சவரனுக்கு மேல் நகைகள் பறிக்கப்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகள் மூலம் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் காண முயன்றுவருகின்றனர்.
தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், நகரின் முக்கிய வீதிகளில் காவல் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Chain Snatching case in 7 place Tamilnadu