திருட்டு காசில் பல்சர் பரிசு கொடுத்த காதல் மைனா, காதலனுடன் கம்பி என்னும் பரிதாபம்.!
chennai college girl arrested march
சென்னை, அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி 1வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.
இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று தனது வாங்கி கணக்கில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் சுமார் 20 லட்சம் மேல் பணம் இருந்த நிலையில், எட்டு லட்சம் ரூபாய் மட்டுமே இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.
இதனையடுத்து, 12 லட்சம் ரூபாய் பணம் எங்கே என்று வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், அவரின் வங்கி பரிவர்த்தனை தரவுகளை ஆய்வு செய்தபோது, அகஸ்டின் செல்போனில் உள்ள google.pay மற்றும் போன் பே மூலம் சிறுக சிறுக பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அகஸ்டின் புகார் அளிக்கவே, புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில், புதுச்சேரியில் காதல் ஜோடி ஒன்றை அதிரடியாக கைது செய்து விசாரணை செய்தனர்.
சதீஷ்குமார் என்ற அந்த இளைஞருடன் இருந்த இளம்பெண் அகஸ்டின் வீட்டில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்த வளர்மதி என்பவரின் 19 வயது மக்கள் சுமித்ரா என்பது தெரியவந்தது.
அகஸ்டியனுக்கு குழந்தை இல்லாததால் சுமித்ராவை அவர் தனது பிள்ளை போல வளர்த்து வந்ததும், அவர் அதனை பயன்படுத்தி அகஸ்டின் செல்போனில் உள்ள கூகுள் பே மூலம் தொடர்ந்து பணத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.
திருடிய பணத்தில் காதலனுடன் கோவா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், அகஸ்டின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தில் காதலன் சதீஷ்க்கு ஒரு பல்சர் பைக் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுமித்ரா மற்றும் சதீஷ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் சுமித்ராவிடம் இருந்து நான்கு புதிய செல்போன்கள், 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், இரண்டு அரை சவரன் தங்க நகைகள், பல்சர் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
English Summary
chennai college girl arrested march