அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி..!! சென்னை மாநகராட்சி திட்டம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்றும் முனைப்பில் நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகள் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. 

அதேபோன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்வையார் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்தார். அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள 22 பள்ளிகளை சேர்ந்த 2,969 மாணவிகள், ராயபுரம் மண்டலத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவிகள், அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள 15 பள்ளிகளைச் சேர்ந்த 1721 மாணவிகள், திரு.வி.க நகர் மண்டலத்தில் உள்ள 28 பள்ளிகளை சேர்ந்த 3,160 மாணவிகள், கோடம்பாக்கம் மண்டலத்துள்ள 20 பள்ளிகளைச் சேர்ந்த 2699 மாணவிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 35 பள்ளிகளை சேர்ந்த 898 மாணவிகள், அடையாறு மண்டலத்தில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த 2,203 மாணவிகள் என மொத்தம் 14,650 மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai corp decided martial arts training for govt school girls


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->