மாண்டஸ் புயலால் சாலையில் குவிந்த கடற்கரை மணல்..!! பொக்லைன் மூலம் அகற்றும் பணி தீவிரம்..!!
Chennai Corp employees removed the dunes of sand from the road
மாண்டஸ் புயல் சென்னை அடுத்த மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது வங்க கடலில் எழுந்த அலையின் காரணமாகவும், சூறாவளி காற்றின் காரணமாகவும் மெரினா, பட்டினம்பாக்கம் பகுதியில் கடற்கரையில் இருந்த மணல் சர்வீஸ் சாலை மற்றும் லூப் சாலையில் வந்து குவியலாக சேர்ந்தது. இதன் காரணமாக சாலை முழுவதும் மணல் சாலை போல் காட்சியளித்தது.
மேலும் தொடர் மழையின் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் லூப் சாலை சேரும் சகதியுமாக மாறியது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மெரினா முதல் கலங்கரை விளக்கம் வரையிலான லூப் சாலை முழுவதும் சேர்ந்துள்ள கடற்கரை மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில் "லூப் சாலை முழுவதும் கடற்கரை மணல் குவிந்து காணப்பட்டது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. தற்பொழுது மழையின் அளவு குறைந்ததால் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் முழுவதையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சாலை முழுவதும் சீரமைக்கும் பணி மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மணல்களையும் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும்" என தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennai Corp employees removed the dunes of sand from the road