#BREAKING: சென்னை மாநகராட்சி 122 வது வார்டு திமுக கவுன்சிலர் காலமானார்...!!
Chennai corporation 122nd ward dmk councillor passed away
சென்னை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்றது.
இது தேர்தலில் திமுக கூட்டணி 179 வார்டுகளையும், அதிமுக 15 வார்டுகளையும், பாமக 5 வார்டுகளையும், அமமுக, பாஜக தலா ஒரு வார்டுகளையும், சுயாட்சிகள் 5 வார்டுகளையும் கைப்பற்றினார். தனிப்பெரும்பான்மையுடன் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ப்ரியா என்பவர் சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 122 வது வார்டு திமுக கவுன்சிலர் ஷீபாவாசி இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் சென்னை மாநகராட்சியின் 9வது மண்டலத்திற்கு உட்பட்ட 122 வது வார்டு தேனாம்பேட்டை கவுன்சிலராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை உடல்நலக் குறைவால் திமுக கவுன்சிலர் ஷீபாவாசி காலமானது திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஷீபாவாசி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary
Chennai corporation 122nd ward dmk councillor passed away