சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் குளிக்க யாருக்கெல்லாம் அனுமதியில்லை? - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் யாருக்கெல்லாம் அனுமதியில்லை?

சென்னை மாநகராட்சியில் பெரியமேடு பகுதியில் உள்ள "மை லேடீஸ்" பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின்போது நீரில் மூழ்கி பலியானார். இதனைத் தொடர்ந்து, இந்த நீச்சல் குளத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஒப்பந்ததாரருக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும்.

பின்னர் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு விதிகளையும் சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:- "சென்னை மாநகராட்சியில் உள்ள நீச்சல் குளங்களில் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்க கூடாது. பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்களை நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் துணை இல்லாமல் அனுமதிக்க கூடாது.

பெற்றோர்களுக்கும் சிறுவர்களுக்கும் நீச்சல் தெரியவில்லை என்றால் கண்டிப்பாக அனுமதி இல்லை. 3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரத்திற்கும் குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது உள்ளிட்ட சாகசங்கள் செய்யவதற்கும் அனுமதி இல்லை. 

இந்த விதிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கவில்லை என்றால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இந்த விதிமுறைகளை முறையாக கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai corporation announced swimming pools rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->