மாதம் ரூ.3000 ஊக்கத்தொகை! சென்னை மாநகராட்சியின் அதிரடி பட்ஜெட் அறிவிப்புகள்!
Chennai Corporation Budget2023
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை "மக்களைத் தேடி மேயர் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று, சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24 -ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் தொடங்கியது. இதில், மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
அவரின் அறிவிப்புகளில் சில :
மக்களை தேடி மேயர் என்ற புதிய திட்டம். மாதம் ஒரு முறை வட்டார அலுவலகத்தில் மக்களிடம் நேரடியாக மனுக்களை பெறும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் செயல்படுத்தப்படும். முதியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முறை முன்பதிவு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை "மக்களைத் தேடி மேயர் திட்டம்" செயல்படுத்தப்படும்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ தொலைவிற்கு ரூ. 55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு புதிய வடிவமைப்புடன் சீருடைகள் வழங்கப்படும்
மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்வு
11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை
சென்னை பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும்.
English Summary
Chennai Corporation Budget2023