சென்னை : சொத்துவரி செலுத்தக் கோரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.!
chennai corporation notice to owner demanding payment of property tax
சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "சென்னை மாநகராட்சியின் சட்ட விதிகளின் படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்திலும் முதல் பதினைந்து நாட்களுக்குள் சொத்துவரியை அதன் உரிமையாளர்கள் செலுத்திட வேண்டும்.
ஆனால், தற்போது மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை சுமார் 5.93 லட்சமாகவும், நிலுவைத்தொகை ரூ.346.63 கோடியாகவும் உள்ளது. இந்த நிலையில், நிலுவைத்தொகையை செலுத்தக்கோரி தபால் துறை மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
அந்த நோட்டீசில் சம்பந்த பட்டவர்கள் நிலுவைத்தொகையை சிரமமின்றி, எளிதாக செலுத்தும் வகையில், கியூ.ஆர்.கோடு வசதி அச்சிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அவர்கள் நிலுவை சொத்துவரியை செலுத்தலாம்.
இந்த சொத்துவரியை வரி வசூல் செய்பவர், இணையதளம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கைபேசி செயலி மற்றும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் உள்ளிட்டவை மூலமாகவும் செலுத்தலாம். மேலும், இந்த சொத்துவரியை செலுத்த தவறுவோரின் சொத்துகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆகவே, நடப்பு நிதி ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சொத்துவரியை நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
English Summary
chennai corporation notice to owner demanding payment of property tax