சொத்து வரி செலுத்தாதோர் பட்டியல் வெளியீடு..!! நிலுவைத் தொகை வசூலிக்க காரர் காட்டும் சென்னை மாநகராட்சி..!!
Chennai corporation published of list of property tax defaulters
சென்னை மாநகராட்சியில் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி வாங்கி வைத்துள்ள 39 பேரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இவர்கள் மூலம் ரூ.24.17 கோடி நிலுவையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி தெரு கட்டண அடிப்படையில் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு அவ்வப்போது சென்னை மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது. அவர் நோட்டீஸ் வழங்கியும் வரி செலுத்தாமல் அலட்சியப்படுத்திய பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் குறித்தான பட்டியலை முதன்முறையாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சொத்து வரி செலுத்தாத 39 பேரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் அடங்கிய பட்டியலை https://chennaicorporation.gov.in/gcc/pdf/Defaulter_List.pdf என்ற இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
மேலும் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி பாக்கி வைத்திருப்போர் குறித்த பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் சொத்துவரி செலுத்தாமல் காலம் தாழ்த்தினால் சீல் வைக்க மாநகராட்சி தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி பாக்கி வைத்திருப்போர் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது. இவர்களின் பட்டியலும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai corporation published of list of property tax defaulters