சென்னை : 'சாட்சிகளே' இல்லை .. ஆனாலும் தண்டனை வழங்கிய நீதிமன்றம் - 'பாலியல்' வழக்கில் ஒரு முன்னுதாரணம்..!!
Chennai Court Convicted Even Though There Were No Witnesses in Sex Harassment case
சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் நாளில் ஒரு நடுத்தர வயது பெண்ணை, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 56 வயதான நபர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. அப்போது சூளைமேடு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 17 வது பெருநகர நீதிமன்ற நீதிபதி அனிதா ஆனந்தின் கீழ் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவரிடம் போலீசார் ஏன் விசாரணை நடத்தவில்லை என்றும், மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் படாதது ஏன் என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதி, "இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு தான் இந்த சமுதாயம் வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை. காவல் துறையினர் வேண்டுமென்றே குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இந்த வழக்கை கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப் பட்டவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ மற்றும் 506 (ii) கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து ரூ. 50, 000 அபராதம் வழங்க உத்தரவிட்டார்.
English Summary
Chennai Court Convicted Even Though There Were No Witnesses in Sex Harassment case