சொத்துவரி விவகாரம் : வீட்டுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சி முடிவு,! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து சீரமைக்கப்பட்ட சொத்துவரி பற்றி வீட்டின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தற்போது, சென்னையில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களில், 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு  சொத்து வரியை நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவலின்படி, நீண்ட நாட்களாக சொத்து வரியை நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும், வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் முன்பாக 3 முறை நோட்டீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai decision seal houses property tax issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->