சென்னைக்கும் வந்துவிட்டது டெங்கு! மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விடுத்த எச்சரிக்கை!
Chennai Dengue Issue sep 2023
சென்னையில் இதுவரை 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நிலவேம்பு, கபசர குடிநீர் ஆகியவர்களை மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம்.
தொடர்ந்து மூன்று நாட்கள் வரை காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள மெடிக்கலுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
நேரடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக காலி மனைகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் நீர் தேங்காமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். வீட்டுக்குள்ளே இருக்கும் நல்ல குடி தண்ணீரில் கூட டெங்கு கொசு இருக்க வாய்ப்புள்ளது. எனவே தண்ணீரை மூடி வைக்க வேண்டும்.
தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
English Summary
Chennai Dengue Issue sep 2023