சென்னை: அதிக கமிஷன் கேட்டு மிரட்டல், தாக்குதல் - திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு பறந்த நோட்டிஸ்!  - Seithipunal
Seithipunal


கமிஷன் கேட்டு சென்னை மாநகராட்சி பணிகளை நிறுத்துவதாக, கவுன்சிலர்கள் மீது தொடர்ந்து புகார்கள் ஆங்காங்கே எழுந்து வருகிறது. 

மேலும், மாநகராட்சி பணிகளில் கமிஷன் கேட்டு ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒரு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், இந்த புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக மாதவரம், அம்பத்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளை சேர்ந்த சில கவுன்சிலர்களுக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கவுன்சிலர்களின் நான்கு பேர் திமுகவை சேர்ந்தவர்களும், அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலரும் புகாருக்கு உள்ளானதாகவும், இவர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே சிறப்பு நுண்ணறிவு போலீசார் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai DMK ADMK Counselor Commission complaint


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->