சென்னைக்கு வெறும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகையில் தாமதம் - காரணம் என்ன?
chennai express train service delay
சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் ரெயில்வே மார்க்கமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி விரைவு ரெயில்கள், புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில்கள் வருகையில் சுமார் ஒரு மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னைக்கு தாமதமாக செல்கின்றன. ரெயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணிக்கு செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
chennai express train service delay