கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல்.. சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக விமானிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

அதன் காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய விமானங்களும், உள்நாட்டு விமானங்களும் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai flights delayed due to heavy rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->