சென்னை மண்டலத்திற்குட்பட்ட வெள்ள தடுப்பு பணிகள் - அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை மண்டலத்திற்குட்பட்ட வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாட்டு பணிகள் விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 13 மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் இன்று (30.07.2024) சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மண்டல பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வுக்கூட்டத்தில், ரூ.700 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள தடுப்பு திட்டங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தூர்வாரும் பணிகள் மற்றும் RRR திட்டத்தின் கீழ் (செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல்) ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

சென்னை. காஞ்சிபுரம். செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வடகிழக்கு பருமழைக்கு முன்பு விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சர் உத்திரவிடப்பட்டது.

இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், கூடுதல் செயலாளர் எஸ்.மலர்விழி, எஸ்.மன்மதன். முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் அனைத்து நீர்வளத்துறை செயற்பொறியாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Flood issue minister order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->