ஆன்லைனில் கெட்டுப்போன உணவா.? பெண் கொடுத்த புகார்.. அதிகாரிகள் விசாரணையில் வெளிவந்த உண்மை.!
Chennai food delevery problem
சென்னை ஆவடி அருகே உள்ள கோவர்த்தனகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஆன்லைனில் குழந்தைக்கு மதிய உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவு சுமார் ஒரு மணி அளவில் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் இரண்டு மணிக்கு அந்த பெண் திறந்து பார்த்தபோது அதில் இருந்த சாப்பாடு கெட்டுப் போய் இருந்துள்ளது.
இது குறித்து உடனே அவர் whatsapp மூலம் ஆவடி உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதி ஆகி நான்கு மாதங்களுக்கு மேல் ஆனது தெரியவந்துள்ளது.
அங்கிருந்த சாதத்தை பார்த்தபோது அதில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. சில்வர் படலம் என்று கூறப்படும் போய்ல் கவரில் உணவை அடைத்து வைத்ததால் அதை கெட்டுப் போனதைப் போல இருந்துள்ளது. அங்கு இருந்த அனைவருக்கும் அந்த உணவை தான் பரிமாறியனார்கள் என்பது தெரியவந்துள்ளது.
எனவே, அந்த பெண் அளித்த புகார் பொய் என்று அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வில் உணவு கையால்பவர்களின் உரிமம், பூச்சி கட்டுப்பாடு அறிக்கை, நீர் சோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்காததால் உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
English Summary
Chennai food delevery problem