இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை! சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆப்பு ரெடி!  - Seithipunal
Seithipunal


கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையின் மாநகரப் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யாத அளவிற்கு தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

இதனை தடுப்பதற்காக மாநகரப் போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் ஒரு சில பேருந்துகளில் கதவுகள் இல்லாததால், மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறைகள் பயணம் செய்வது தொடர் கதையாகவே இருந்தது. 

இந்த நிலையில், மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இல்லாத 468 பேருந்துகளில் கதவுகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது வரை 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளில் இன்னும் ஒரு வாரத்தில் தானே கதவுகள் பொருத்தப்படும் என்று மாநகர போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் மேற்கொள்ளாதவாறு கண்காணிக்கவும், அப்படி பயணிக்கும் பேருந்துகளை நிறுத்தி விட, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு மட்டுமல்லாமல் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் பேருந்துகளின் மேல் கூரையில் மீது பயணம் செய்து செய்வதை தடுக்கவும் மாநகர போக்குவரத்து துறை சார்பில் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Govt Bus Door issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->