தலைமை ஆசிரியர் மீது "62 ஆசிரியர்கள் பரபரப்பு புகார்".. அதிரடி காட்டிய பள்ளிக் கல்வித்துறை.!! - Seithipunal
Seithipunal


பள்ளி நிதியை கையாளர்கள் செய்ததாக தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விவகாரம் பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் மீது பள்ளி நிதியை மனைவி பேருக்கு மாற்றியது மாணவர்களிடம் முறைகேடாக பணம் வசூல் செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்களை உதவி தலைமை ஆசிரியர் உட்பட 62 ஆசிரியர்களும் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததோடு அது குறித்து அறிக்கையையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டது.

அதில் தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது அந்த பரிந்துரையின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சக்திவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் பணிபுரிந்த போது பள்ளி நிதியை கையாளன் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai govt school hm suspended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->