சென்னை: கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து - தீவிர சிகிச்சை! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவரை மகன் கத்தியால் தாக்கியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சரியில்லை, காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, சென்னை அருகே மாமுல் கேட்டு தராத பெண் வியாபாரியை ரவுடி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai gundy Govt Hospital Doctor Attacked


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->