தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளம்! காவல்துறைக்கு சவுக்கடி கொடுத்த உயர்நீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது பற்றி காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

சென்னை பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்று வாரிய கட்டடப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பின. 

அதில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? 

போதை பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் காவல்துறையில் உள்ளதா? இல்லையா? 

போதைப் பொருள் வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்று, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள், மது பழக்கத்தினால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக தமிழக அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் இதுபோன்று ஒரு கேள்வியை தமிழக காவல்துறைக்கு எழுப்பி உள்ளது, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Condemn to TN Police TN Drugs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->