தமிழகத்தில் பெய்யும் மழையை சேமிப்பதற்கு ஏதேனும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? - உயர்நீதிமன்ற கிளை.!
Chennai HC Division Say About Rain Water Saving
பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து வெட்டுவதற்கு அரசு அனுமதி இல்லாமல் வெட்ட முடியுமா? என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
தேவைக்கு அதிகமான அளவு தமிழகத்தில் மழை பொழிவு இருக்கும் நிலையில், அதனை சேமிப்பதற்கு ஏதேனும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரங்கள் வெட்டப்பட்டு வருவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து வெட்டுவதற்கு அரசு அனுமதி இல்லாமல் வெட்ட முடியுமா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்விகளை எழுப்பியது.
மேலும், விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படும்போது விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும், தேவைக்கு அதிகமான அளவு தமிழகத்தில் மழை பொழிவு இருக்கும் நிலையில், அதனை சேமிப்பதற்கு ஏதேனும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த வழக்கு குறித்து வேளாண் துறை மற்றும் வனத் துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Chennai HC Division Say About Rain Water Saving