அரசு பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை : ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனது இடமாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் அவர்கள், கல்வித்துறையில் லஞ்சத்தை முடிவுகட்ட, லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், கல்வித்துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், "குறிப்பாக அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும். அப்போதுதான் கல்வித்துறையில் ஊழலை பெருமளவு குறைக்க இது உதவியாக இருக்கும். ஊழல் புகார் வந்தால் உடனடியாக தகவல்களை திரட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் மனுதாரர் நிர்வாக ரீதியாக இடம் மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். எனவே அவரது இடமாறுதலில் தலையிட முடியாது என்று, அவரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அவர்கள் தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC Divition order for School Education Some issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->