184 ஏக்கர் நிலம், திமுக எம்பி, இயக்குநரின் உறவினர் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுக்கு சொந்தமான 184 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்க விவகாரத்தை, விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தை விரிவாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும். நீர்நிலை நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிலம்பநாதன் பேட்டையில் தமிழக அரசின் 184 ஏக்கர் தரிசு நிலம், தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திமுக எம்பி, திரைப்பட இயக்குனரின் உறவினர்களுக்கு இந்த தரிசு நிலம் மற்றும் நீர்நிலைகள் பட்டா வழங்கப்பட்டதாகவும், நில நிர்வாக ஆணையரின் அனுமதி இன்றி பட்டாநிகமாக மாற்றப்பட்டதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடலூர் ஆர்டிஓ உத்தரவு பற்றி நிலநிர்வாக ஆணையர் விசாரணை செய்து, வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Order for Cuddalore land issue DMK MP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->