100 ஆண்டு புளிய மரங்கள் : அதிரடியான உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சேலம் : மல்லூர் பேருந்து நிலையம் அமைப்பதற்காக, 100 ஆண்டுகள் பழமையான 7 புளிய மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

சேலம் மாவட்டம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரஞ்சித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், "மல்லூர் கிராமத்துக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையை அனைத்து வாகனங்களும் பயன்படுத்துவதால், புதிதாக பேருந்து நிலையம் கட்ட எந்த அவசியம் இல்லை.

நூற்றாண்டுகளுக்கும் மேலான புளிய மரங்கள் எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை. எனவே இந்த மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'பேருந்து நிலையம் அமைக்க நூறாண்டு பழமையான புளிய மரங்களை வெட்ட அனுமதி வழங்கக்கூடாது' என சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மல்லூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order for mallur bus stand case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->