#BREAKING | தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பண பலன் வழங்காததை எதிர்த்து, ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் ஒரே வகையான பண பலன் நிர்ணயித்து கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு அரசு ஆசிரியர்களுக்கான பண பலன் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு உரிய பண பலன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து மேல்முறையீட்டு வழக்குகளில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதனை அடுத்து இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பண பலன்களை வழங்க வேண்டும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த உத்தரவை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நாளை தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, உத்தரவு பிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Order To School Education dept Commissioner


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->