இரவு நேரத்தில் கடற்கரைக்குச் செல்ல கூடாதா? - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
chennai HC order to tn police for peoples going to beach and park case at night
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயில் வட்டி வதைக்கிறது. அதனால், மக்கள் இந்தக் கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் காவலர்கள் வெளியே அனுப்புவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை, இரவு 9:30 மணிக்கு மேல் காவல் துறையினர் துரத்தி விடுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து டி.ஜி.பி.க்கும், மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றுத் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு, தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.
English Summary
chennai HC order to tn police for peoples going to beach and park case at night